Wednesday, 4 February 2015

தொடர்பாடல்

திறன் என்பது ஒரு செயற்பாட்டில் ஒருவருக்கு இருக்ககூடிய திறமைய அல்லது ஆற்றலை குறிக்கிறது. பொதுவாக திறன்கள் கல்வி, பயிற்சி, அனுபவம் ஊடாக விருத்திசெய்யபடுகிறது.
உடல் திறன்கள்[தொகு]
·         ஓடுதல், நடத்தல், பாய்தல், தாண்டுதல்
·         நீச்சல்
கல்வி திறன்கள்[தொகு]
·         பகுத்தறிவு
·         கற்றல்
·         வாசித்தல்
·         எழுதுதல்
·         கேட்டல்
·         பேசுதல்
·         கணித்தல்
·         கணிமை
தொடர்பாடல்[தொகு]
·         உரையாடல்
·         நிகழ்த்துதல்
·         ஆவணப்படுத்தல்
கலைகள்[தொகு]
·         பாடுதல்
·         ஆடுத்தல்
·         நடித்தல்
·         நகைச்சுவை
·         இசை
·         வரைத்தல், ஓவியம்
ஆய்வு[தொகு]
·         அகமாய்தல்
·         வினவுதல் / கேள்வி கேட்டல்





பின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.
·         மொழி தெரியாமை
·         உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை
·         வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்
·         கவனத்தை திசை திருப்பும் காரணிகள்
·         நேரம் போதாமை
·         பெளதீகவியல் காரணிகள்
·         மருத்துவ ரீதியான காரணிகள்
·         நம்பிக்கைகள்
·         உணர்வுகள்

1.    அனுப்புனர்
2.    ஊடகம்
3.    பெறுனர்
ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.
உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது.









தொடர்பாடல் 

 தொடர்பாடல் என்பது குறிப்பிட்ட ஊடகமொன்றை பயன்படுத்தி தகவல்களை அல்லது செய்திகளை அனுப்புகின்ற செயற்பாடாகும். இங்கு பெறுபவர்களினால் தகவல் பெறப்பட்டு அனுப்புவோருக்கு பின்னூட்டல் ஒன்று வழங்கப்படுகின்றது. எல்லா சந்தர்ப்பங்களிலும் தொடர்பாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு அனுப்புபவர் தகவல் மற்றும் குறிப்பிட்ட அனுமானிக்கப்பட்ட பெறுபவர் ஆகிய கூறுகள் ஆகியன அவசியமாகின்றது. எவ்வாறெனினும் தகவல் அனுப்புகின்ற வேலையிலேயே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. தொடர்பாடலில் உரையாடல், பாடல்கள், உரைநடை , சப்த ரீதியான தெளிவுபடுத்தல்கள், அங்க அசைவுகள், சைகைகள், தொடுகைகள், பார்வைகள், சித்திரங்கள், வரைபடங்கள் மற்றும் எழுத்தாவனங்கள் போன்ற வாய்மொழியற்ற ஊடகங்களையும் காணமுடிகின்றது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக தொடர்பாடல் துறையில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். தொடர்பாடல் தொடர்பாக புதிய எண்ணக்கருவைப் போன்று புதிய முறைகளும் தொழிநுட்பத்தினால் பாரியளவில் இத்தகைய வளர்ச்சியின் காரணமாக சிறப்பாக சில துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டது. ஊடகத்துறை தொடர்பாடல் மற்றும் மனோ விஞ்ஞானம் என்பவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். தகவல் தொடர்பாடலில் ஏற்பட்ட குறிப்பிட்ட குறிப்பிடத்தக்க மாற்றத்தினை மூன்று கட்டங்களில் கலந்துரையாட முடியும். உருவப் படங்கள் மற்றும் எழுத்தாவனங்களைப் பயன்படுத்தி தொடர்பாடுகின்ற முறை முதலாவது கட்டமாகும். இத்தகைய எழுத்துக்களில் சிறந்த வடிவங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் இருந்த எழுத்து மூலமான இத்தகைய தொடர்பாடல் நடமாடல் அற்றது காரணம் இவை குறிப்பிட்ட இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களாகவே இருந்தன. தொடர்பாடல் துறையின் இரண்டாவது வளர்ச்சி கட்டமாக கடதாசி கிளே வெக் போன்ற திரவியங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட எழுத்து மூலமான தொடர்பாடலினை குறிப்பிட முடியும். இதை ஒவ்வொரு இடத்திற்கும் அசைக்கவோ அல்லது நகர்த்தவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக எழுத்துக்களை பயன்படுத்தி தகவல்கள பரிமாறுகின்ற இத்தகைய முறை இவ்வுலகத்தில் பிரதானமான கட்டத்தில் வளர்ச்சி பெற்றதாக குறிப்பிட முடியும். தொடர்பாடலின் மூன்றாவது கட்டமாக இலத்திரனியல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி தொடர்பாடல் மேற்கொள்ளப்படுகின்ற நடபடி முறையினை குறிப்பிடலாம். இக்கட்டத்தில் தொடர்பாடலானது பாரிய அளவில் மிகப் பெறும் வளர்ச்சி ஒன்றினை அடைந்தது. தொடர்பாடல் செயன்முறையில் அனுப்புபவரினால் வெளிப்படுத்தப்படும் குறித்த அர்த்தத்தையுடைய தகவல் அதே போன்று அர்த்தம் பெறுவதற்கு பெறுபவரும் சம்மந்தப்பட வேண்டும். இதற்கு இரு தரப்பினரும் இருதரப்பினரின் தகவல்களை அனுப்பும் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் காணப்பட வேண்டும். ஒழுங்கமைத்தல், கேட்டல், கிரகித்தல், பேசுதல், வினவுதல், பகுப்பாய்வு செய்தல், அங்க அசைவுகளைக் காட்டுதல்,அனுமானித்தல் போன்ற பல்வேறு திறன்கள் தொடர்பாடலைப் பொறுத்தமட்டில் அவசியமாகின்றது.

நபர்களுக்கிடையிலான ஒருங்கிணைவு ஒத்துழைப்பும் தொடர்பாடலைப் பொறுத்தமட்டில் அவசியம். அதே போன்று தொடர்பாடலில் காணப்படக்கூடிய சில பொதுவான தடைகளையும் குறிப்பிட முடியும். இவற்றில் பிரதானவையாக தகவல் அனுப்பப்படும் போது அது தேவையை விட பெரியதாக காணப்படுவதாகும். தகவலானது தெளிவானதாகவும் மிக சுருக்கமானதாகவும் காணப்பட வேண்டும்.

மானுடத் தொடர்பாடல்(Human Communication) 
பேசுதல் மற்றும் எழுதுதல் என்பன மானுடத் தொடர்பாடலில் காணப்படக்கூடிய பிரதானமான பண்புகளாகும். இதற்காக எழுத்துக்கள் குறியீடுகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. சொற்கள் மற்றும் மொழி என்பது எல்லா நாடுகளையும் பொறுத்த மட்டில் ஒரு பொதுவான விடயமாகும். மனிதன் தனது குழந்தை பருவம் முதல் ஏதேனும் மொழி அல்லது சில மொழிகளை பயின்று கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றமை ஒரு பொதுவான விடயமாகும். நபர்களை அண்மித்து காணப்படும் ஏனைய நபர்கள் பயன்படுத்தும் சப்தங்கள் பேசுகின்ற முறை மொழிகளில் வெளிப்பட்டிருக்கின்றமையை அவதானிக்கலாம். இது வரையில் உலகில் பல்லாயிரககணக்கான மொழிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாய்மொழியற்ற தொடர்பாடல் (non verbal communication) 
சொற்களைப் பயன்படுத்தாது தகவலை அனுப்புதலும் பெற்றுக் கொள்ளுதலுமான செயற்பாடுகள் வாய்மொழியற்ற தொடர்பாடாலாகும். அங்க அசைவுகள், உடல் அசைவுகள், உடல் பாவனைகள், கண் அசைவுகள் போன்ற பல்வேறு வழிமுறைகளில் தகவல்களை அனுப்புதல் வாய் மொழியற்ற தொடர்பாடலில் குறியீடுகள் வரைபடங்கள் சமிக்ஞைகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இது குறியீட்டு தொடர்பாடல் எனவும் குறிப்பிடப்படுகின்றது. நபர்களின் அன்றாட நடவடிக்கைகளில் வாய்மொழியற்ற தொடர்பாடல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதை காணலாம். வாய்பேச முடியாதவர்களின் மத்தியில் பயன்படத்தப்படுகின்ற தொடர்பாடல் முறையாக இதனை குறிப்பிடலாம். இதனை "para language"  என ஆங்கிலத்தில் கூறுவர். வாய்மொழியற்ற தொடர்பாடலை பிரதானமாக நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.

உடல் ரீதியானது (physical)
அதாவது நபர்கள் தனது உடல் அசைவுகள் தொடுகைகள் மற்றும் குரல் என்பனவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளுதல்

பொழுது போக்குத்துறை நீதியானவை (Aesthetic)
இசைக்கருவிகள் நடனம் ஓவியங்கள் என்பனவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளுதல்

விஞ்ஞானம்(Science) 
HORNS AND SIRENS, GUN SALUTE
என்பனவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

குறியீட்டு முறை (Symbolic)
சமய ரீதியான நம்பிக்கை ரீதியான வழிபாடுகள் என்பவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

பார்வைத் தொடர்பாடல் அல்லது ஒளித் தொடர்பாடல் (Visual communication)
பார்வையினூடாக மேற்கொள்ளப்படுகின்ற தொடர்பாடல் முறைமை பார்வைத் தொடர்பாடல் எனப்படும். வாசிக்கக் கூடியவாறு அல்லது பார்க்கக் கூடியவாறு தகவல்களை அனுப்புகின்ற முறை இதில் இடம்பெறுகிறது. இது இரு பரிமாண உருவப் படங்களோடு தொடர்புபடுகின்றது. (two diamancial images) அதாவது ஓவியங்கள், வரைபடங்கள், வர்ணங்கள் என்பவற்றுடன் இலத்திரனியல் ஊடகங்களும் சம்மந்தப்படுகின்றது. இத முற்று முழுதாக பார்வையினூடு சம்மந்தப்படுகின்றது.

வணிகத் தொடர்பாடல் (business communication)
பொருட்கள் சேவைகளின் அபிவிருத்திக்கு அல்லது ஒருங்கமைப்புக்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற தொடர்பாடல் வணிகத் தொடர்பாடல் என கூறப்படுகின்றது. வணிகத் தொடர்பாடலினை பல்வேறு தலைப்புக்களின் கீழ் காணலாம். சந்தைப்படுத்தல் வியாபாரக் குறி வாடிக்கையாளர் தொடர்பு நுகர்வோர் எதிர்பார்க்கைகள் மேம்படுத்தல் பொதுமக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் இதனைக் காண முடிகின்றது. அதே போன்று நலன்புரி தொடர்பாடல் என்பது நலன்புரி நிகழ்ச்சிகள் ஆராய்ச்சிகள் முகாமைத்துவம் நபர்களுக்கிடையிலான இடைத் தொடர்பு ஊழியர் நிகழ்ச்சிகள் இணையத்தள் நிகழ்ச்சிகள் ஆகியத்துறைகளில் வணிகத் தொடர்பாடல் என்பது பயன்படுத்தப்படுகின்றது.வணிகத் தொடர்பாடல் வெவ்வேறு ஊடகங்களின் ஊடாக இடம்பெறுகின்றது. இணையம் (Internet) அச்சு வெளியீடுகள் (printed materials) வானொலி (radio) தொலைக்காட்சி (television) வெளியகத் தொடர்பாடல் (outdoor communication) வாய்ச் சொற்கள் ( word of mouth) போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு உதாரணங்களை இதற்காக முன் வைக்க முடியும்.

இன்று வணிகத் தொடர்பாடல் வளர்ச்சியடைந்த ஒன்றாக பேசப்படுகின்றது.ஆகவே இதனை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான தேவையும் எழுந்துள்ளது. வணிகத் தொடர்பாடலினை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் வெவ்வேறு நுட்பங்கள் காணப்படுகின்றன. அத்தகைய நுட்பங்கள் கீழ்வருமாறு

இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் (web based communication)
இம்முறையின் மிக அனுகூலமான மற்றும் வளர்ச்சியடைந்த ஒரு தொடர்பாடல் முறையாகும். இதனை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பெற்றுக் கொள்ளக் கூடியமை சிறப்பான அம்சமாகும்.

இலத்திரனியல் அஞ்சல்( E- mail) 
எழுத்தாவனங்களை துரித கதியில் உலகமெங்கும் பரிமாற்றுகின்ற ஒரு பிரதான தொடர்பாடல்.

அறிக்கைகள் (reports) 
ஏதேனும் நிறுவனம் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தி தயாரிக்கின்ற ஆவணமாகும்.

வெளிப்படுத்தல்கள் (presentations)
அநேகமான நிறுவன்ஙகள் பயன்படுத்தும் பிரபல்யமான முறை இதுவாகும். சாதாரணமாக செவிமடுத்தல் மற்றும் பார்வை ஆகிய இரு முறைகளும் இதற்காக பயன்படுத்தப்படும். உதாரணம் Microsoft PowerPoint my :y J adopt flash player> photo copies என்பனவாகும்.

தொலைபேசி விவாதங்கள்
தூரத்தில் உள்ளோரோடும் கலந்துரையாடி தகவல்களை பரிமாறுகின்ற செயற்பாடு இதுவாகும்.

முகத்துக்கு முகமான ஒன்றுகூடல்கள்
எழுத்தாவணங்களை வைத்துக் கொண்டு நேருக்கு நேர் கலந்துரையாடுகின்ற முறை நிறுவனங்களில் காண முடிகிறது. எல்லா முகாமையாளர்களினதும் ஓர் பிரதானமான கருமமாக தொடர்பாடல் காணப்படுகின்றது. ஒழுங்கமைப்பின் பல்வேறு துறைகளுக்கிடையில் தகவல்கள் எண்ணங்கள் உணர்வுகள் போன்றவற்றை திட்டமிட்டு அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது பொறுப்பாகும். தொடர்பாடல் இன்றி மானுடத் தொடர்பினை கொண்டு செல்லுதல் கடினமான ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக வணிகமொன்றின் வெற்றிக்கு வினைத்திறன் மிக்க தொடர்பாடல் அவசியமாகின்றது. நிறுவனத்தின் நிலைபேற்று தன்மைக்கு மட்டுமன்றி நபர்களின் சிறந்த வாழ்வுக்கும் தொடர்பாடல் இன்றியமையாததாகின்றது. தொடர்பாடல் என்பதற்கான குறுகிய வரைவிலக்கணமே பேசுதல் மற்றும் செவிமடுத்தல் எனக் கூறலாம். (speaking and hearing) ஆனால் தொடர்பாடல் என்பதற்கு பாரிய வரைவிலக்கணம் ஒன்று வழங்கப்படலாம். தொடர்பாடல் ஒன்று சிறந்த தொடர்பாடலாக அமைவது அனுப்பப்படும் தகவல் பெறப்பட்ட நபரினால் அனுப்பப்பட்ட வகையிலேயே பூரணமாக விளங்கிக் கொள்ளுதலையே கருதுகின்றது. தகவலானது விளைதிறன் மிக்க வகையில் கிடைக்கப்பெறுமானால் அதற்கான பின்னூட்டலும் சிறப்பானதாக இருக்கும். குறைபாடுடைய தொடர்பாடல் ஒன்றில் அதன் பெறுபேறும் குறைபாடுடையதாகவே காணப்படும். வணிகமொன்றின் முகாமைத்துவம் மற்றும் ஊழியர் தொடர்பு போன்றவற்றை ஏற்படுத்த தொடர்பாடல் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. தகவல்கள் மற்றும் தீர்மானங்கள் என்பனவற்றை சிறப்பாக மேற்கொள்ள தகவல் வெளிப்படுத்தப்படல் தொடர்பாடப்பாடல் சிறந்த முகாமைத்துவம் என்பனவற்றை ஏற்படுத்துவதற்கு தொடர்பாடல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.






மனிதன் ஒரு சமூக விலங்கு. தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, தான் தனியாக வாழ்தல் என்பது முடியாத ஒன்று. பிறைடே (Friday) பாத்திரம் சேர்ந்திராவிட்டால் கற்பனைக் கதையில் கூட ரொபின்சன் குரூசோ போன்ற மனிதன் சோபித்திருக்க முடியாது. ஆகவே தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களோடு நல்ல உறவைக் கொள்ளுதல் என்பது மிக முக்கிய வாழ்வுக் கூறு ஆகிறது. 
மற்றைய உயிரினங்களோடு நல்ல உறவைக் கொள்ள முடியாதவர்களுக்கு இப் பூமியில் உள்ள பகற்காலங்களும் இருளாகவே இருக்கும். ஏனெனில் உறவுதான் மனித மனங்களுக்கு ஒளியைத் தந்து இதமூட்டுகிறது. மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் உறவாடல் இவை எல்லாம் கலைகள் என்று சொல்லப்பட்டாலும் கூட அவை கற்றுக்கொள்ளக் கூடிய கலைகளும்தான்.

நூல்களில் இவற்றைக் கற்கலாம். அதைவிட இலகுவாக எமக்குள் வாழும் ஆளுமையில் சிறந்த மனிதர்களிடம் இருந்தும் கற்கலாம். இம்மாதம் 27ம் திகதி தனது 60அகவையை நிறைவு செய்யும் எழுத்தாளர், விமர்சகர், வைத்தியர் எம்.கே.முருகானந்தனிடம் இருந்து நிறையவே கற்கலாம்.

தொடர்பாடல் திறன்
வளர்ச்சியைத் தூண்டும் உறவுகளில் மனிதத் தொடர்பாடல் மிக முக்கியமானது. ஓவ்வொரு மனித நடத்தையின் அடியிலும் ஒரு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கும். இதனை விளங்கிக் கொண்டு, அந்தத் தேவையை ஏற்றுக் கொண்டு, தொடர்புகளை மேற்கொள்ள முனையும்போது அது இலகுவில் வெற்றி பெறும் என்ற உண்மையைத் தெரிந்து அதன்படி அநாயாசமாக வாழும் மனிதர் எம்.கே.எம் அவர்கள்.

வெளித் தோற்றத்தில் ஒரு சிறிய உருவம். எந்நேரமும் மலர்ந்து சிரித்த முகம். அம் முகத்திற்கு மேலும் சோபை தருவன அந்தக் கண்களும் கண்ணாடியும்.

மிகப் பெரிய மருத்துவமனைகளில், மிகப் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களிடம் காட்டி மாறாத நோயாளிகள் பலரும் டொக்டர் எம்.கே.எம்மிடம் காட்டிய பின் நோய்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?

நோயாளியின் உள்ளத்தோடு வேலை செய்யும் தனித்திறனால் இது சாத்தியமாகிறது என்றே நான் நம்புகிறேன்.

தான் தரம் 3 அல்லது 4 படித்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை எம்.கே.எம் இப்படி நினைவு கூருகிறார். எனது வருத்தத்திற்காக ஒரு சிவப்பு மருந்து கொடுக்கப் பட்டிருந்தது. நான் அந்தக் கலர் மருந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனது உறவினர் ஒருவர் அதைத் திரும்ப எடுத்துச் சென்று பச்சைக் கலர் மருந்து வாங்கி வந்தார்.

எம்.கே.எம் பாக்கியசாலி. அவரது இளமைக் கால அனுபவம் ஒன்று- அல்லது பல- இப்படி நேராய் அமைந்ததால் மருந்து குடிப்பதில் நோயாளியின் விருப்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தோடு உடன்படும் ஒரு வைத்தியராக இன்றுவரை பணியாற்றுகிறார். கடந்த பத்து வருட காலத்தில் ஏறத்தாள ஐம்பதாயிரம் நோயாளர்களைத் தனது கணினி பதிவு செய்திருக்கிறது என்று சொல்லும் எம்.கே.எம்மிடம் அவ்வளவு பேர் அள்ளுப்பட்டு வருவதற்கு அவரது தொடர்பாடல் திறன் முக்கிய காரணி என்பதை யாரும் மறுக்க
 
முடியாது.

உற்றுக் கேட்டல் திறன்
நோய் நொடி வரும் சந்தர்ப்பங்களில் எமது குடும்பத்தினரும் எம்.கே.எம் அவர்களிடமே செல்வோம்.எமது குடும்ப வைத்தியர் என்ற வகையில் அவரது உற்றுக் கேட்டல் திறனைப் பல சந்தப்பர்ப்பங்களில் நான் அவதானித்து வியந்துள்ளேன்.

உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் பகுதியான கேட்டல் செய்பவர்களாகவே இருப்பதை நான் அவதானித்துள்ளேன். தொலைபேசியில் உரையாடிப் கொண்டே தனக்கு முன்னால் இருக்கும் ஊழியருக்குப் பதில் சொல்லும் அதிகார்கள் எமக்கு நல்ல பரிச்சயம். கையெழுத்துக்களைப் போட்டுக் கொண்டும், காதில் ஒட்டிக் கொண்ட தொலைபேசியைக் கழுத்தைச் சரித்து அணைத்தபடி உரையாடிக்
 
கொண்டும் முன்னால் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளரின் பிரச்சனையைக் கேட்கும் வங்கி அதிகாரிகளை எமக்கு நன்கு தெரியும். அது ஒரு சிறப்பான தகமை (ஒரு நேரத்தில் மூன்று வேலை) என்றும்தான் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எமது மூளை ஒரு கணத்தில் ஒரு விடயத்தை மட்டுமே கிரகிக்கும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.

தனக்கு முன்னால் இருக்கும் நோயாளியின் முறைப்பாட்டை அவர் எவ்வளவு நேரம் எடுத்துச் சொன்னாலும், உடலும் மனமும் முழுமையாக ஈடுபட்ட நிலையில் கேட்கும் வைத்தியர் நோயாளியின் மனத்தை வென்றவர் ஆகிவிடுகிறார் அதற்கான மிகச் சிறந்த உதாரணம்தான் எம்.கே.எம் அவர்கள்.

நோயாளியின் கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைத் தருவதில் அவர் என்றுமே தயக்கம் காட்டியதில்லை. நலவியல் சம்பந்தமாக எழுதுகிறவர்கள் பொதுவாக நோயாளிகளுக்கு விளக்கம் தருவதில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்என்று தான் எங்கோ வாசித்ததை நினைவு கூருகிறார் எம்.கே.எம். ஆக, இவர் ஒரு நல்ல எழுத்தாளராக இருப்பதும், வெற்றி பெற்ற வைத்தியராக இருப்பதும் எப்படி ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒன்றை ஒன்று அணைதுச் செல்கிறது என்பதைப் பார்க்கிற போது வியப்பாகவும் மகிழ்வாகவும்
 
இருக்கிறது.

ஒத்துணர்வுத்திறன்ஒரு மொழியில் வன்மையான சொற்களும், இனிமையான சொற்களும் கலந்தே காணப்படும். ஆயினும் மனித உறவுகளை மேம்படுத்த
 
விருப்புவோரும், கற்றறிந்தோரும், சான்றோர்களும், நல்ல விழுமியங்களை உடையோரும் இனிமையான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கதைப்பர் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் கருத்து.

யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே

இனிய உளவாக இன்னாத கூறல்
 
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று


போன்ற பழம் பாடல்கள் இதை உணர்த்தும்.

இனிமையாகப் பேசுவது என்பது ஒரு கொடைதான் ஆயினும் அக அமைதியும் உளச்சமநிலையும் உடையோர்க்கு மட்டுமே அது சாத்தியப்படும். இனிமையாகப் பேசுபவர்களிடம் ஏனைய மனிதர்கள் யாவரும் ஈர்க்கப்படுவது இயல்பு.
 

டொக்டர் எம்.கே.எம் அவர்கள் நோயாளிகளுடன் ஒத்துணர்வுடன் கதைப்பதைப் பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்துள்ளேன். தனது மருத்துவ அநுபவத்தில் ஏறத்தாள ஒன்றரை இலட்சம் நோயாளர்களைச் சந்தித்திருக்கக் கூடிய ஒருவர், தான் அவர்கள் யார் மீதும் கோபப்பட்டதாகப் பெரும்பாலும் நினைக்கவில்லை என்று கூறுகிறார். இதுவே அவரது அகச் சமநிலைக்குச் சிறந்த சான்றாகும்.

இனிமையாகப் பேசுதல் என்ற பெரும் பரப்பினுள்ளே ஒத்துணர்வுடன் பேசுதல் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விசேட திறன் ஆகும். ஒருவருடைய உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்வது அல்லது விளங்கிக் கொள்வது கடினமானது. அதிலும் குறிப்பாக ஒருவர் தனது மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதனைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரது உணர்வுகளை அடக்கி விடவே நாம் பொதுவாக முயல்வதுண்டு.

ஆராச்சியாளர்களை மிகவும் ஈர்த்துள்ள விடயமாக இருக்கும் ஒத்துணர்வு டொக்டர் எம்.கே.எம் இடம் இயல்பாக அமைந்து விட்ட ஒரு பண்பாக இருக்கிறது. நோயாளியின் தனிப்பட்ட உலகினுள் புகுந்து அதனைத் தனக்குப் பழக்கமான இடமாக்கிக் கொள்ளும் ஒத்துணர்வே அவரை நோக்கி இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளது.

உடனிருத்தல் திறன்
நோயாளியோடு உடனிருப்பது கடினமான விடயம். பெரும்பாலும் அவர்களது உடல் நோய் காரணமாகப் பல்வேறு மறை உணர்வுகளோடு வந்திருப்பர். அது மனிதர் என்ற வகையில் மருத்துவரையும் தொற்றிக்கொள்ளக் கூடும். அதனால்தான் பலர் களைப்படைந்து, சக்தி தீய்ந்து எல்லோரிடமும் கோபித்துக் கொள்வதுண்டு. தற்கொலை நூற்றுவீதம் கூட மருத்துவத் தொழில் செய்பவர்களில் ஒப்பீட்டளவில்
 
அதிகம்.

பல நோயாளிகளுடன் இருந்து அவர்கள் சொல்லும் மறை உணர்வு நிறைந்த கதைகளை எல்லாம் கேட்கிறபோது உங்களுக்கு சக்தி தீய்தல் உணர்வு ஏற்படுவதில்லையா?” என்று எம்.கே.எம் மிடம் கேட்டபோது, “எனக்கு நோயாளிகளை அட்டெண்ட் (Attend) பண்ணுவதில் ஒரு மகிழ்வு இருக்கிறது. சில வேளை காலையில் வைத்தியசாலைக்கு வரும்போது ஒரு சிறிய தலையிடி இருந்தாலும், நோயாளிகளைப் பார்க்கத் தொடங்க அது போய்விடும்என்கிறார். பாருங்கள்! ஒருவர் தனது தொழிலில் இருந்து எப்படி மகிழ்வைப் பெற்றுக் கொள்கிறார் என்று. தான் செய்யும் தொழிலில் இருந்து சம்பளத்தை மட்டும் பெறுபவர்கள் போன்ற பரிதாபத்திற்குரியவர்கள் யாரும் இருக்க முடியாது.

மனம் திறந்து பேசும் திறன்.

We talked with open heart and tongue
Affectinate and true

என்பது Words Worth இன் ஒரு கவிதை வரி. நானோ அல்லது எனது குடும்ப அங்கத்தினர் யாருமோ நோயாளி என்ற நிலையில் டொக்டர் எம்.கே.எம் அவர்களைச் சந்தித்துத் திரும்பும்போது மேலே சொன்ன வரி எனக்கு நினைவு வருவதுண்டு. நோயாளி என்ற நிலையில் வருபவரோடு கூட மனம் திறந்து உண்மையாகப் பேசும், உண்மையாக நடந்து கொள்ளும் மருத்துவர்கள் குறைவு. அந்த ஒரு சிலரில் எம்.கே.எம் முக்கியமானவர். வைத்தியம் கூட வியாபாரமாகி விட்ட இன்றைய நவீன உலகில் இவர் ஒர வைரம். இவர் ஒரு முத்து.ஆக எம்.கே.எம் அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளராக இருப்பதால் சிறந்த விமர்சகராக இருக்கிறார். சிறந்த விமர்சகராக இருப்பதால் நல்ல வைத்தியராக இருக்கிறார். நல்ல வைத்தியராக இருப்பதால் உன்னத எழுத்தாளராக இருக்கிறார். மொத்தத்தில் உன்னத ஆளுமை வாய்க்கப் பெற்ற ஒரு மனித மாணிக்கமாக விளங்குகிறார்.

மணிவிழாக் காணும் எம்.கே.எம் அவர்கள் இன்னும் பல நூல்களை எழுத வேண்டும். இன்னும் பல லட்சம் மனிதர்களுக்கு வைத்திய உதவி செய்து அவர்களின் வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதோடு தானும் நீடு வாழ்ந்து நூற்றாண்டு விழாப் பொலிவு காண வேண்டும்.

 அறிவோடு சேர்த்து ஆளுமையையும் விருத்தி செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆளுமை விருத்தி தொடர்பில் பன்நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருகின்ற போதும் இன்று அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இன்றைய வேலைத்தளங்களிலும் சமூ கத்தளத்திலும் அறிவால் மாத்திரம்  தலையை நிரப்பியவர்களைவிட நல்ல ஆளுமைப் பண்புகளை நிரம்பப் பெற்றவர்கள் அதிகம் வரவேற்கப்படுகின்றனர். ஒரு காலத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பெற வெறும் கல்விச் சான்றிதழ் தகைமைகள் எதிர்பார்க்கப்பட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட போதிலும் இன்று ஆளுமைப் பண்புகளுக்கும் முதன்மை கொடுக்கப்படுகின்றமை ஆழக் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
ஆளுமை Personality என்றால் என்ன?
ஆளுமை’ என்ற சொல் Personality என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும். Personality என்ற ஆங்கிலப்பதம் முகமூடி’ என்று பொருள் கொண்ட Persona என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும்.
ஒரு ஹீரோ திரைப்படமொன்றிலோ அல்லது நாடகமொன்றிலோ என்ன வேடத்தைப் போடுகின்றாரோ அவ்வேடத்திலேயே பார்வையாளர்கள் முன் அறிமுகமாகிறார். அது போலவே ஒருவர் தான் வாழும் சமூகத்திற்கு எந்த வேடத்தை வெளிப்படுத்துகிறாரோ அந்த சமூகத்தில் அதுவே அவருடைய ஆளுமையாகக் கருதப்படுகிறது. ஒருவர் முயல் போன்று முகமூடி அணிந்தால் அவர் முயல் போன்றும் மான் போன்று முகமூடி அணிந்தால் மான் போன்றும் காட்சி தருவார். அதுபோலவே ஒருவர் சமூகத்தில் தன்னை எவ்வாறு வெளிக்காட்டுகிறாரோ அதுவே அவருடைய ஆளுமையாகக் கணிக்கப்படுகிறது என்பதே Personality என்பதன் பொருளாகும்.
ஆளுமை என்றால் என்ன என்பதற்கு பல அறிஞர்களும் பல வரைவிலக்கணங்களைக் கூறுகின்றனர்.
1. ஆளுமை என்பது மற்றவர்களிடமிருந்து பிரித்து ஒருவரின் தனித்தன்மையைக் காண்பிக்கும் முகமாக ஒருவர் தன்னை முன்னிறுத்துவதாகும்.
2. ஒருவரின் பிரத்தியேகமானநீண்ட காலத்திற்குக் காணப்படக்கூடிய முரண்பாடற்ற சிறப்பியல்புகள்தான் ஆளுமையாகும்.
3. நீண்டதொரு காலத்திற்கு ஒரு நபரால் ஒன்றிணைந்து தனித்துவமாகக் காணக்கூடிய மன வெழுச்சிசிந்தனை மற்றும் நடத்தைசார் அமைப்புகளின் தொகுப்பாகும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்களைத் தொகுத்துக் கூறுவதாயின் ஆளுமை என்பது ஒருவரது ஒன்றிணைந்த நடத்தையாகும். அது பரம்பரைத் திறன்களையும் சூழலின் தாக்கங்களையும் கொண்டது. அது அவனுடைய உடலமைப்புநடத்தைக் கோலங்கள்கவர்ச்சிகள்,மனப்பாங்குகள்உளத்திறன்கள் விழுமியங்கள்சொற்கள்சொல்லும் முறைபலவித சூழ்நிலைகளிலும் வெளிக்காண்பிக்கும் தன்னம்பிக்கை மற்றும் பல்வேறு இயல்புகள் ஆகியவற்றின் முழு அமைப்பாகும்.
ஆளுமைப் பண்புகள் பிறவியிலிருந்தே நம்மோடு உள்ளதாஅல்லது ஒருவரால் உருவாக்கிக்
கொள்ளப்படுகிறதா? என்ற வினா அறிஞர்களுக்கு மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற போதும் இரண்டும் கலந்திருக்கின்றன என்பது நடுநிலை பேணுவோரின் கருத்தாகும். இத்தகைய ஆளுமைப் பண்புகள் ஆளுக்காள் வித்தியாசப் படக்கூடியதாகவும் நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப வித்தியாசப்படக் கூடியதாகவும் விருத்தி செய்ய முடியுமானதாகவும் காணப்படுகிறது. இதனால்தான் ஒரு காலத்தில் மோசமானவானாக இருந்த ஒரு மனிதன் பிறிதொரு காலத்தில் நல்லவனாக மாறுவதைக் காண்கிறோம்.
ஆளுமை வளர்ச்சியில் பங்குகொள்ளும் காரணிகள்
1. உடலியற் காரணிகள்: நரம்புத் தொகுதிகளின் தொழிற்பாடு, குருதியோட்டம் ஆகியன ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கின்றன.
2. உடலமைப்பு: ஒருவருடைய உடல் வளர்ச்சிக்கமைய அவருடைய நடத்தைக் கோலங்களிலும் மாற்றம் ஏற்படுகிறது.
3. உளத்திறன்கள்      4. மனவெழுச்சிகள்
5. சூழற் காரணிகள்    6. வீட்டு வாழ்க்கை முறை
7. நாளமில்லாச் சுரப்பிகள்: உதாரணமாக, தைரொட் சின் மிகையாகச் சுரந்தால் கோபம் வரும்.
இவற்றோடு தன்னம்பிக்கை, நேர்க்கணியச் சிந்தனை, தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளல், சுயநலமற்ற சேவை என்பனவும் ஒருவரில் சிறந்த ஆளுமை உருவாகுவதில் பாதிப்புச் செலுத்துகின்றன.
சிறந்த ஆளுமை என்பது என்ன?
இதற்கு விடையளிப்பது கடினமாயினும் சிறந்த ஆளுமை சமூகத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவனுடைய ஆளுமை அவனுடைய உடலியல், உளவியல் திறன்களிலும் தங்கியுள்ளது. உயிரியல் காரணிகள் சமூகச் சூழல் காரணிகளுடன் கொண்ட இடைவினையின் விளைவாகவே ஆளுமைக் கோலம் உருவாகிறது. பிறருடன் சுமுகமான தொடர்புகள் கொண்ட பிள்ளைகளின் ஆளுமைப் பண்புகள் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டன. இப் பண்புகள் நேர்மை இரக்கம், முகமலர்ச்சி, தாராள மனப்பான்மை, அடக்கம், கீழ்ப்படிவு, நம்பிக்கை, கவர்ச்சி மற்றும் சிறந்த தொடர்பாடல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.
சிறந்த ஆளுமை உருவாக்கத்திற்கான அணுகுமுறைகள்
1. இலக்கைத் தீர்மானித்தல்
2. நேர முகாமைத்துவம்
3. தொடர்பாடற் திறன்கள்
4. தலைமைத்துவப் பண்புகள்
இவ்விடயங்கள் ஒரு மனிதனிடத்தில் சரியாக அமையப் பெறுமாயின் அவன் சிறந்த ஆளுமையுடையவனாகத் திகழ்வான் என்பதில் ஐயமில்லை. இலக்கை எவ்வாறு தீர்மானிப்பது? நேரத்தை முகாமைத்துவம் செய்வது எப்படி? என்ற விடயங்கள் அகரத்தின் சென்ற பல இதழ்களில் கலந்துரையாடப்பட்டன. இங்கு நாம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் அம்சம் மாணவர்கள் தங்களைச் சிறந்த ஆளுமைகளாகக் காட்டிக் கொள்ள எவ்வாறான தொடர்பாடல் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும், அவற்றை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.
தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன் என்பது தலைமைத்துவப் பண்புகளுள் முதன்மையானதும் முக்கியமானதுமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பண்பு பொதுவாக மாணவர்கள் தங்கள் ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்கும் குறிப்பாக, மாணவத் தலைவர்களுக்கும் ஏனைய தலைமைத்துவப் பதவி வகிக்கின்ற மாணவர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. தொடர்பாடலில் ஏற்டும் தடங்கல்கள், தவறுகளினால் உருவாகும் விளைவுகள் பாரதூரமானவை. இதற்கு நாளாந்த வாழ்க்கையில் பல உதாரணங்களை கண்டு கொள்ள முடியும்.
ஒரு விடயத்தைச் சொல்லும்போது பிழையாக விளங்கிக் கொள்ளும் ஒருவர் தான் விளங்கியவாறு செய்ய முயற்சிப்பார். முடிவில் நடக்க வேண்டும் என எதிர்பார்த்த விடயம் நடைபெற்றிருக்க மாட்டாது. இதுபோல் தகவல்களை வழங்கும் போது சரியான முறையில் வழங்காவிட்டாலும் இதே பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இறுதியில் தகவல் வழங்குபவர்களுக்கும் பெறுபவர்களுக்குமிடையில் முரண்பாடும் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பாக அது அமைந்து விடுகிறது.
எனவே, ஒருவரின் ஆளுமையை விருத்தி செய்வதற்கும் ஒரு காரியத்தை ஆக்கபூர்வமாக நிறைவேற்றுவதற்கும் தொடர்பாடல் திறன் மிக இன்றியமையாததாக இருக்கிறது.
தொடர்பாடலில் முக்கிய மூன்று தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன.
1. தகவல்களைப் பெறல்
2. தகவல்களைச் சேமித்து மீளப் பயன்படுத்தல்
3. தகவல்களை வழங்குதல்
 1. தகவல்களைப் பெறல்
தொடர்பாடல் திறன்களில் தகவல்களைப் பெறுதல் முக்கியமான ஓர் அம்சமாகும். தகவல்களைப் பெறும்போது அல்லது உள்வாங்கும்போது அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள பல்வேறு வகையான நுணுக்கங்களை அவதானிக்க வேண்டும். தகவல் பரிமாற்ற நிகழ்வு வாய்மொழியாகவோ, எழுத்தாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்கலாம். அவதானக் குறைவானது தகவல்கள் மறந்து போவதற்கும் ஞாபகத்தில் பதியப்படாமல் விடுபடுவதற்கும் காரணமாக அமைகிறது.
நீங்கள் பெற்றுக் கொண்ட தகவல்கள் மறக்காது அல்லது ஞாபகத்தில் பதியப்படாமல் விடாது என்பதை உறுதி செய்ய இரு வழிமுறைகள் உள்ளன.
1. குறிப்பெடுத்தல்: தகவல்களைப் பெறும்போது முக்கியமான தகவல்கள் எனக் கருதுபவற்றை எப்போதும் குறித்துக் கொள்ள வேண்டும்.
2. செவியுற்றதிலிருந்து நீங்கள் எதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதை திரும்பக் கூறுதல்.
இவ்வாறு தகவல்களைப் பெறும்போது இடம்பெறும் தொடர்பாடல் சிறப்பாக அமைய வேண்டுமானால், தகவல்களைக் கூறுபவர் சுதந்திரமாகப் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பின்வரும் அம்சங்கள் பேசுபவர்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
ü  உடம்பை சற்று முன்னால் வளைத்தல், கவனத்தை நன்கு செலுத்தல், குறிப்பெடுத்தல் மற்றும் இது போன்ற செயற்பாடுகள் மூலம் ஆர்வத்தை வெளிப்படுத்தல்.
ü  புதிய கருத்துக்களையும் சிந்தனையையும் பேசுபவர் வெளிப்படுத்தும்போதுSuperb!, Wow!, Excellent! போன்ற வார்த்தைகளைக் கூறி ஆர்வத்தோடு வரவேற்றல்.
ü  கண் தொடர்பைப் பேணல். பேசுபவரின் கண்ணைப் பார்த்தவாறே செவிமடுத்தல்.
ü  புன்முறுவல் செய்தல், அமைதியாகவும் ஆறுதலாகவும் Friendly ஆகவும் இருத்தல்.
ü  பேசும்போது தொடர்பறாத வண்ணம் கவனத்துடன் காது கொடுத்தல்.
அல்லாஹ் மனிதனுக்கு ஒரு நாவையும் இரண்டு கண்களையும் இரு காதுகளையும் கொடுத்துள்ளான். அதிகம் கேட்டு, அதிகம் பார்த்து அளவோடு பேச வேண்டும் என்பதற்காகவே. சிலர் அடுத்தவர்கள் பேசும்போது அதை அவதானிக்க மாட்டார்கள். அது அவசியமற்ற பேச்சு என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொள்வர். அல்லது கவனத்தை வேறு திசையில் செலுத்துவர். பேசுபவர் பேச்சை முடிக்கும் முன்னரே பக்கத்தில் இருக்கும் மறொருவரிடம் வேறு ஒரு விடயம் பேச ஆரம்பிப்பார் அல்லது பேச்சை இடையில் நிறுத்தி தான் பேச ஆரம்பிப்பார். இத்தகைய செயற்பாடுகள் பேசுபவரின் பேச்சையும் அவரையும் இழிவுபடுத்துவதாக அமையும். எனவே உங்கள் சகோதரன் பேசும்போது அவனது பேச்சை ஆர்வத்துடனும் அவதானத்துடனும் கேளுங்கள்.
02. தகவல்களைச் சேகரித்தலும் மீளப் பெறுதலும்
நீங்கள் பெற்றுக் கொண்ட தகவல்கள் பின்னர் பயன்படுத்தத் தேவைப்படும்போது மீட்டவேண்டி ஏற்படலாம். தகவல்களச் சேமித்து மீளப் பெறுவதற்கு இன்று பல வழிமுறைகள் காணப்படுகின்றன. கணினிகளை இதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம். எந்த மொழியைப் பயன்டுத்துகிறீர்கள் என்பது இங்கு முக்கியமாகக் கருதப்படுவதில்லை. தகவல்களைச் சேமிக்கவும் தேவையானபோது மீட்டவும் பல நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக குறிப்பெடுத்தல், மனனம் செய்தல், ஒலி, ஒளிப்பதிவு செய்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்
தொடரும்...  
ஹனீபா ஏ. வஹாப் (இஸ்லாஹி)
03. தகவல்களை வழங்குதல்
தகவல்களை வழங்கும்போது முடியுமானளவு ஐம்புலன்களையும் பயன்படுத்த முயற்சியுங்கள். வழங்கப்படுகின்ற தகவல்கள் உரியவரைச் சரியான முறையில் சென்றடைய பின்வரும் அம்சங்கள் துணைசெய்கின்றன:
தெளிவாகப் பேசுதல்
·         ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளும் மொழியைப் பயன்படுத்துங்கள்.
·         தொனியை உயர்த்தியும் தாழ்த்தியும் சந்தர்ப் பத்திற்கேற்றவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
·         குறிப்பாகச் சொல்ல நாடும் விடயத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.
·         அட்டவணைகள்வரைபடங்கள்வரிப்படங்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி விளக்குங்கள்.
·         செவிமடுப்பவரின் கண்கள் மற்றும் நெற்றிப் பகுதிகளைப் பார்த்துப் பேசுங்கள்.
இவை தவிர இன்னும் பல பயனுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி தகவல்களை இலகுபடுத்தி யாவரும் விளங்கும்படி செய்யலாம்.
மாணவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பாடற் திறன் என்பது அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகளில் ஒன்றாகும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கின்ற விடயங்கள் தவிர பாடப்பரப்புக்கு வெளியிலும் ஆசிரியர்கள் பல கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்குவர். இவற்றை ஒழுங்கான முறையில் செவிமடுத்து சேமித்துத் தேவையானபோது மீட்டிப் பயன்படுத்தும் போது அங்கு சிறந்த ஆளுமைகள் வளர்கின்றன. சரியான முறையில் செவிமடுக்கத் தவறும்போது வேண்டப்பட்ட காரியம் சரியாக நிறைவேறாமல் பிழைத்துவிடுவதுடன் உனக்கு ஒரு விடயத்தைச் சொல்வது எருமை மாட்டில் மழை பெய்வதுபோல் என்றும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் என்றும் ஆசிரியரின் வாயால் திட்டுவாங்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. பிற்காலத்தில் இது மாணவர்களின் ஆளுமையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்படக் காரணமாக அமையலாம்.
மாணவத் தலைவர்கள்வகுப்புத் தலைவர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களிலுள்ள மாணவர்களும் அதிபர்களிடமிருந்தும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய உயர் பொறுப்புக்களில் உள்ளவர்களிடமிருந்தும் தகவல்களைச் சரியான முறையில் பெற்று அதன்படி ஒழுகத் தவறின் அங்கு ஒழுக்காற்று மற்றும் நிருவாகச் சிக்கல்கள் ஏற்பட ஏதுவாக அமைந்துவிடும். இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள தொடர்பாடல் திறன் என்ற ஆளுமைப் பண்பை மாணவர்கள் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெறுகின்ற தகவல்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள எப்போதும் தம்முடன் சிறியதொரு குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும். கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் போது ஏதாவது தகவல்கள் விளங்காவிட்டால் அல்லது மயக்கம்குழப்பம் காணப்பட்டால் அந்த இடத்தில் தமது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பிழையாக விளங்கித் தவறாகக் காரியமாற்றுவது ஆளுமை விருத்திக்கு உதந்ததல்ல.
பாடசாலையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கலாம். உங்களுக்கு தலைமைத்துவப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் மேலிடத்தில் வருகின்ற உத்தரவுகள் தகவல்களையும் உங்களுடைய சில தீர்மானங்களையும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். நீங்கள் தகவல்களை வழங்கும்போது அமைதியாகவும் ஆறுதலாகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பேசுங்கள். தேவைப் படும்போது அட்டவணைகள்மரவரிப் படங்கள்வரைபடங்கள் மற்றும் இதுபோன்ற தகவல்களை இலகுபடுத்தக்கூடிய அம்சங்களைப் பயன்படுத்துங்கள். இதற்காக Bristol Board, Art Board, Papers போன்றவற்றையும் Multi Media Projector, Over Head Projector போன்ற நவீன சாதனங்ளையும் பயன்படுத்தலாம்.
பேசும்போது
பேசும்போது குறைவாகப் பேசுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பலர் உரையாடும்போது அனாவசியமாக நீண்ட நெடிய விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
அளவுக்கதிகமாகப் பேசுவது ஒரு குறையாகும். ஆனால் அளவுக்கதிகம் என்பதை எந்த அளவு கோலைக் கொண்டு நிர்ணயிப்பது என்ற கேள்வி எழலாம். மேடைப் பேச்சென்றால் இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்று பிறர் நினைக்கும் நேரத்தில் முடிக்க வேண்டும் என்பர். பொதுவாக குறிப்பிட்ட இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு போதுமான தகவல்களையும் விடயங்களையும் மாத்திரம் பேச வேண்டும். நிறையப் பேசினால் நம் கூற்று மட்டுமல்லாது நம் ஆளுமையும் சிதைந்துபோகும் அபாயம் ஏற்படுகிறது. இது தவிர நம் பேச்சு செல்லும் திசையும் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஏதோ பேசி வம்பில் கொண்டுவிடும் அபாயமும் ஏற்படுகிறது.
குறைவாகப் பேசுபவர்கள்மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். அதிகமாகப் பேசப் பேசஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும். ஒவ்வொரு சொல்லும் நம் முழுக் கட்டுப்பாட்டுடனும் நம் சிந்தனை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டும் வெளிவர வேண்டும். அது பாட்டுக்கு லீக்கான நீர்க்குழாய்போல் கொட்டக் கூடாது.
முக்கியமான தகவல்களைப் பரிமாறுவதற்காக கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் தேவையற்ற விடயங்களை அளவுக்கதிகமாகப் பேசும்போது எது தேவையானதுஎது தேவையற்றது என்ற விடயத்தில் செவிமடுப்பவர்கள் குழம்பி விடுவர். எனவேஅளவாகப் பேசி ஆளுமையை வளர்க்க ஒவ்வொரு மாணவனும் முயற்சிக்க வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்:யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும் இல்லாவிட்டால் வாய் மூடியிருக்கட்டும்.
இந்த ஹதீஸ் நல்ல விடயங்களை மாத்திரம் பேசுவதை ஈமானுடன் தொடர்புபடுத்திப் பேசுவதை அவதானிக்க முடிகிறது. எனவேஒரு முஃமின் தேவையான நல்ல விடயங்களை மாத்திரம்தான் பேசுவார். தேவையற்ற மோசமான விடயங்களைப் வளவளவெனப் பேசி மற்றவர்களைத் துன்புறுத்து வதை விட்டும் அலுப்பூட்டிக் களைப்படையச் செய்வதைவிட்டும் தவிர்ந்திருப்பார்.
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தேவையற்ற விடயங்களைப் பேசக்கூடாது என்பதற்காகவே தனது வாய் நிறைய கூழான் கற்களைப் போட்டுக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
யார் இரு தாடைகளுக்கும் இரு தொடைகளுக்கு மிடையே உள்ளவற்றிற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தைக் கொண்டு பொறுப்பேற்கிறேன்.
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு அடியான் நல்லதா கெட்டதா என சிந்திக்காமல் ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான். அதன் காரணமாக நிச்சயமாக அவன் மேற்கிக்கும் கிழக்கிற்குமிடையே உள்ள தூரத்தை விட மிகத் தூரமாக நரகத்தில் விழுந்து விடுகிறான்.
எனவேஅநாவசியமாக சிந்திக்காமல்தன்பாட்டுக்கு வாய்க்கு வருவதையெல்லாம் கொட்டித் தீர்ப்பதால் ஆளுமைக் குறைபாடு மாத்திரமன்றி நரகில் விழுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுகிறது என்பதையும் அளவாகவும் அடக்கமாகவும் தேவையான விடயங்களை மாத்திரம் பேசுவதால் ஆளுமை விருத்தியடைவதுடன்நாளை மறுமையில் சுவனமும் கிடைக்கும் என்பதையும் மேற்கூறப்பட்ட நபி மொழிகள் விளக்குகின்றன.
மாணவப் பருவத்தில் வளர்த்துக் கொள்ளும் இவ்வாறான ஆளுமைப் பண்புகள் பாடசாலை வாழ்க்கையுடன் முற்றுப் பெறுவதில்லை. சமூக வாழ்க்கைதொழில் வாழ்க்கை என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. எனவேதொடர்பாடற் திறனை வளர்த்து முழுமையான ஆளுமையை விருத்தி செய்ய முயற்சி செய்வோம். இதனூடாக சுவனம் நுழைவதற்கான சந்தர்ப்பத்தையும் அமைத்துக் கொள்வோம்இன்ஷா அல்லாஹ்.
ஹனீபா ஏ. வஹாப் (இஸ்லாஹி)

உறவுகளை ஆழப்படுத்துங்கள் 

எம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று உறவுகள்’. மனிதர்கள் தங்களுடைய ஏதோ ஒரு தேவையினை பூர்த்தி செய்வதற்கு ஒருவர் ஒருவருடன் எப்படியோ தொடர்பு பட்டிருக்கவேண்டும். எந்த மனிதனிடம் உறவுகள் சமநிலையில் காணப்படுகின்றதோ அவனே ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்கின்றான் எனலாம்.

உறவுகளை ஆழப்படுத்த தவறுமிடத்தோ அல்லது பிரிவுகள் பிளவுகள் ஏற்படுமிடத்தோ மனிதர்களின் நடத்தைகளில், சிந்தனைகளில் உணர்வுகளில் பாரிய மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும். அதாவது அதிகம் கோபப்படும் ஒருவராகவோ அல்லது ஆக்ரோச நடத்தையில் ஈடுபடுவதாகவோ அல்லது தாழ்வு மனநிலை கொண்டவர்களாகவோ அல்லது பாரிய சுயநலம் கொண்டவராகவோ காணப்படலாம். இவ்வாறான போக்கால் மனிதர்கள் உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ பாதிப்படைகின்றான். இவ்வாறு மனிதர்கள் மாறுபடுவதற்கு காரணங்களும் ஏராளமாக இருக்கலாம்.
உ+ம் : போர், இடப்பெயர்வு, வறுமை,…. எனவே இதிலிருந்து விடுபடுவதற்கு உறவுகளை ஆழப்படுத்துவது அவசியமாகின்றது.

1.
தொடர்பாடல் திறனை வளர்த்தல்
நாம் மற்றவருடன் எம்முடைய கருத்துக்களை, எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தொடர்பாடல் திறன் முக்கியமான ஒன்று. தொடர்பாடல் அடக்குமுறையானதோ அல்லது கட்டளையிடுவதான வார்த்தைகளோ இல்லாதிருக்க வன்முறையற்ற தொடர்பாடலை கற்றுக்கொள்ளலாம். எப்பவும் எமது அறிவால் மட்டும் கதைக்காது இதயத்தால் ஒன்றித்து அறிவால் உணர்ந்து மற்றவருடன் பேசக் கற்றுக் கொள்ளவேண்டும்.

2.
செவிமடுத்தல்
நாம் மட்டும் எந்நேரமும் பேசிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் மற்றவர்கள் என்ன பேசுகின்றார்கள், என்பதை சற்று பொறுமையுடன் இருந்து கேட்டல் மிக நல்லது.

3.
ஒத்துணர்வு, புரிந்துணர்வு
நாம் மற்றவர்களின் உணர்வுகளை எண்ணங்களை புரிந்து அவர்கள் உணர்வது போல உணர்ந்து அதை வெளிப்படுத்துவதே இதுவாகும். இதனை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எங்களுடையதாகக் கடைப்பிடிக்கின்றோமோ அது மிக நல்லது.

4.
அக்கறை, அல்லது கரிசனை
எப்பவும் என்னை மட்டும் மையப்படுத்தாது மற்றவர்களது வளர்ச்சியிலும் அவர்களுடைய சுக துக்கங்களில் எங்களின் அக்கறையினை, கரிசனையினை வெளிப்படுத்த வேண்டும்.

5.
தொடுகை
நாம் மற்றவர்களுடன் எங்களுடைய உறவுகளை ஆழப்படுத்துவதற்கு தொடுகையும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இருந்தும் எமது சமூக கலாச்சார விழுமியங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

6.
எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக இருத்தல் வேண்டும்.
நாம் அன்றாடம் பழகுபவர்களிடம் நம்பிக்கைக்குரியவர்களாகவே இருக்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் இங்கு கேட்டு அங்கு சொல்வதை அல்லது அங்கு கேட்டு இங்கு சொல்வதையும் மற்றவர்களின் பின் குறை கூறுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

7.
ஏற்றுக்கொள்ளலும் விட்டுக்கொடுத்தலும்
எப்போதும் எங்களுடைய கருத்துக்களில் விடாப்பிடியாக நிற்காமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அவர்களை குறைகளுடனும் நிறைகளுடனும் ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து பழகுதல் நல்லது.

8.
முத்திரை குத்தாமல், தீர்ப்பிடாமல் பழகுதல் வேண்டும்.
அதாவது ஒருவரை என்ன ஜாதி, மதம் அல்லது ஏழை பணக்காரர், நல்லவர், கெட்டவர் என்று எமக்குள் ஒருவித எண்ணங்களுடன் பழகாமல் எல்லோரும் மனிதர்கள் என்ற எண்ணத்துடன் பழக வேண்டும்.

9.
அன்பு, மதிப்பு
அனைவரும் பெறுமதியானவர்கள் என நினைத்து அன்பு செய்து மதித்து பழக வேண்டும்.
இவ்வாறு உறவுகளை ஆழப்படுத்துவதற்கு எமக்குள் பல பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். ஆரோக்கியமான மனித சமுதாயமாக நாம் வாழ வேண்டுமாயின் எம்முடைய உறவுகளை முதலில் ஆழப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.




கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு
பொதுவாக, கல்வியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்துவத்தை அனைவரும் அறிவர்.
ஆனால், தகவல் தொடர்பு நுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு மற்றும் அதன் முழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றன. இப்பகுதி, கல்வித்துறையில் தகவல் தொடர்பு நுட்பத்தின் தாக்கம் பற்றிய கட்டுரைகள், வலைதளங்கள், கருத்தாய்வுகள் போன்றவைகளை கொண்டுள்ளது. அத்துடன், பள்ளிகளில் எந்த நோக்கில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும் இப்பிரிவில் காணலாம்.
தகவல் தொடர்பு பயன்பாடு, அதன் மூலம் ஏற்படும் நன்மைகள், தகவல் தொடர்பு நுட்பங்களை கல்வித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க வழிமுறைகள் பற்றிய அனுபவங்களும், இப்பிரிவில் வழங்கப்படுகின்றன.
பயன்படும் தொழில்நுட்பங்கள்
உலகளவில் தொழில் நுட்ப பயன்பாட்டின் அனுபவங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலும் அவை கீழ்கண்ட தலைப்புகளுள் அடங்கும்
* பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்
*
கல்வித்தொலைக்காட்சி
*
கல்வி வானொலி
*
இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல்
*
நூலகங்கள் மூலம் ஆராய்தல்
*
அறிவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறைகள்
*
ஊடகங்களின் பயன்பாடு
*
இளம் குழந்தை வளர்ச்சி, குறைந்தளவு மக்கள்தொகை உள்ள இடங்களில் கல்வி, முதியோர் கல்வி, பெண்கல்வி, வேலைத்திறனை அதிகரித்தல் ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு நுட்பங்கள் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
*
ஆசிரியர்களை தயார் செய்யவும், அவர்களது பணிக் காலத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுட்பங்கள்.
*
கொள்கைளைத் திட்டமிடல், உருவாக்குதல், புள்ளி விவரங்கள் பராமரித்தலுக்கான நுட்பங்கள்.
*
பள்ளிகள் பராமரிக்கத் தேவையான நுட்பங்கள்.
இன்றைய நுட்பங்கள்
கல்வி கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில், கீழ்கண்ட நுட்பங்கள் அடங்கும்
* கற்பிக்கும் உபகரணங்கள்
*
ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
*
மென்பொருள், பொருளடக்கம்
*
இணைக்கும் முறைகள்
*
ஊடகம்
*
கல்வி சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.
கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன?
21ம் நூற்றாண்டில் கல்வித்துறை மாற்றத்தில், தகவல் தொடர்பு திட்டம் பேருதவி புரிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் முறையாக செயல்படுத்தபடுமேயானால், வாழ்நாள் முழுக்க பயன்படும் கல்வி அறிவு மற்றும் திறமையை மாணவர்கள் எளிதாக பெற இயலும்.
தகவல் தொடர்பு நுட்பம், குறிப்பாக, கணிணி மற்றும் இணையதளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயன்பெரும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் புதிய முறை பாடம் கற்பித்தலில், ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி கற்பிக்க வழிவகுக்கிறது.
ஆர்வத்துடன் பயிலுதல்: தகவல் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாட்டின் மூலம், பல புதிய முறைகளில் தகவலை பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மணப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், கற்றலை எளிமையாக்குதல், கற்போரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி அமைதல் ஆகியவை சாத்தியமாகும்.
கூட்டாக பயிலுதல் : தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிலுதல் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களிடையே அவர்களுடைய இடம், தகுதியை கணிக்காமல் கலந்துரையாட ஊக்குவிக்கின்றது. பலவிதமான கலாச்சார பிரிவினரிடையே பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதன் மூலம் கற்போருடையே ஒருமித்த கருத்தும், தகவல் பரிமாரிக் கொள்ளும் திறனும் அதிகமாக உதவி செய்கிறோம். மேலும் கல்வி பயிலுதல் ஒரு காலகட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், வாழும் காலம் முழுக்க தொடர்பணியாக மேற்கொள்ளப்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா?
தகவல் தொடர்பு நுட்பத்தினால் கல்வியில் தாக்கம் ஏற்படுவது, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது, எதற்காக பயன்படுத்தப்படுகிறது, என்பதைப் பொறுத்து அமையும். மற்ற கல்வி கற்கும் சாதனங்கள், கருவிகள், மாதிரிகளைப் போல, தகவல் தொடர்பு நுட்பம் எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை.
கல்வி பயிலுதலை சாத்தியமாக்குதல்:
தகவல் தொடர்பு நுட்பம், அடிப்படை கல்வி பயிலுதலை எவ்வளவு அதிகப்படுத்தியுள்ளது என்பதை கணித்தல் கடினமாகும். ஏனென்றால் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வுப்பணி சிறிய அளவிலானது. முழுமையாகவும் அது பற்றி கருத்து தெரிவிக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளி அளவில் தகவல் தொடர்பு நுட்பம் கடைபிடிக்கப்பட்ட மாதிரிகளும் இல்லை. உயர் கல்வி மற்றும் பெரியோர் கல்வியில்,
பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தகவல் தொடர்பு நுட்பங்கள் மூலம் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பதிவு செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விளங்கும்.
தரம் உயர்த்துதல்:
வானொலி, தொலைக்காட்சி மூலம் கல்வி ஒளிபரப்பின் தாக்கம் குறித்த முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை என்றாலும், சிறிதளவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சாதாரண பள்ளிக்கூடகல்வி முறையோடு இம்முறை ஒத்திருப்பதாக தெரிய வருகிறது. இம்முறையால் மாணாக்கர்களின் மதிப்பெண்களும், அவர்கள் பள்ளிக்கு வருகின்ற நாட்களும் உயர்ந்திருப்பதாக தெரிகிறது.
மாறாக, கணிணிப் பயன்பாடு, இணையதள மற்றும் அது தொடர்பான நுட்பங்களின் பயன்பாட்டால், பயிலுதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால், இது பற்றி கருத்து பேதங்களும் நிலவுகிறது.
கணிணியின் பயன்பாட்டால், இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் பயன்பாட்டளவு உயர்ந்துள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, கணிணி, ஒரு ஆசிரியராக இருந்து, எப்போதும் பயன்படுவதால், பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உதவி புரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மாணவர்களும் விரைவாக கல்வி பயிலுகின்றனர். கற்கும் திறன் அதிகமாகின்றது. மாணவர்கள் கணிணியை பயன்படுத்தும்போது, அதிகமாக படிக்கத் தூாண்டுதல் ஏற்படுகின்றது. இவ்வளவு முடிவுகள் தெரிவிக்கப்பட்டாலும் இதிலும் சில குறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கணிணி பயன்பாடு, இணையதளம், அது சார்ந்த நுட்பங்கள், ஆசிரியர் பயிற்சியும், படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், உதவி செய்கிறதாம். இந்த ஆய்வுகள் அனைத்தும், விமர்சனத்திற்கு உட்பட்டவை. இதில் குறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரியான புள்ளி விபரங்கள் இல்லாததே குறையாகும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கல்வி கற்றலில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என கூறுப்படுகிறது.
கணிணி மற்றும் இணைய தளங்களின் பயன்பாட்டை கணிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை, கற்போரை மையமாக வைக்கும் கல்வி சூழலை பரிசோதிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகளால் முடியாது. அத்துடன் கற்கும் முறையோடு, தொழில்நுட்ப பயன்பாடும், ஒருங்கிணைந்து வருவதால், எந்த நுட்பம் சரியானது என்பதை கண்டுபிடிப்பதும் கடினம். கற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு, நுட்பங்கள்தான் காரணம் என்பதையும் முடிவு செய்ய இயலாது.
நன்றி
நாம் இவ்விடத்தில் இன்றைய போட்டித் தன்மையான உலகையும் வேலை வாய்ப்புச் சந்தையையும் எதிர் கொள்ள எமது மாணவர்களிடத்தே வேண்டப்படும் திறன்கள் சிலவற்றை கவனிப்போம்.
1) தொடர்பாடல் திறன்
2) முகாமைத்துவ திறன்
3) தலைமைத்துவ திறன்
4) ஆளுமைத் திறன்
5) தகவல் தொழில்நுட்ப திறன்
6) சவாலை எதிர்கொள்ளும் திறன்
7) இடரினைத் தாங்கும் திறன்
8) சமயோசித தந்திரோபாய திட்டமிடல் திறன்
9) முரண்பாட்டு முகாமைத்துவத் திறன்
10) புதிது புனையும் திறன்
11) நகைச்சுவைத் திறன்
12) ஆராயும் திறன்
13) செவிமடுக்கும் திறன்
14) தீர்மானம் எடுக்கும் திறன்
15) அமுலாக்கும் திறன்
16) சமூகமயமாகும் திறன்
மேற்குறித்த திறன்கள் உள்ள ஒரு மாணவனாலேயே இன்றைய உலகை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும்.
தொடர்பாடல் திறன்
தொடர்பாடல் திறன் எனும் போது அதனுள் பல விடயங்கள் உள்ளடக்கப்படினும் பிரதானமாக மொழியினை லாவகமாக கையாளுதலே முதன்மை பெறும். தாய்மொழி தவிர்ந்த எனைய மொழிகளில் உள்ள தேர்ச்சி ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு சமனாக்கின்றது. எத்தனை மொழிகளை நாம் பேசும் திறன் மிக்கவர்களாக இருக்கின்றோமோ நாம் அத்தனை மனிதர்களுக்கு சமமானவர்கள் மொழிப்புலமை எனும் போது குறிப்பாக ஆங்கில மொழிப்புலமை முக்கியமானதாக கருதப்படுகின்ற போதும் இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள மொழியையும் பொருத்தப்பாட்டுடன் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி அண்மைக்காலமாக வன்முறையற்ற தொடர்பாடல் என்ற விடயம் பற்றியும் பேசப்படுவதையும் தாங்கள் அறிவீர்கள். மற்றவர்களின் மனங்களை காயப்படுத்தாமல் எங்கள் உணர்வுகளை பரிமாறத் தெரிந்து கொள்ளலே வன்முறையற்ற தொடர்பாடல் என்ற அடிப்படையாயினும் இவ் விடயம் அதிகம் ஆழமானதும் அறியப்படவேண்டியதுமாகும். நேரச் சுருக்கம் கருதி அது தொடர்பில் இவ்விடத்தில் அதிகம் குறிப்பிடமுடியவில்லை.
இடரினைத் தாங்கும் திறன் ;
எம்மில் பலர் எமது பொறுப்புக்களின் வழி வரும் சவால்களைச் சந்திக்க திராணியற்று பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்;டி வருகின்றோம். இந்தத் தயக்கம் வாழ்வில் நாம் அடைய வேண்டிய உன்னதங்களையும் உயர்ச்சிகளையும் வீணாக விழுங்கி விடுகின்றது. எவனொருவன் சவால்களை சந்திக்க துணிகின்றானோ அவனால் மட்டுமே சோதனைகளைத் தாண்டி சாதனைகளைப் படைக்க முடியும். உலகில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய மனிதர்களுள் பலர் தங்கள் முயற்சிகளின் போது பல்வேறு இடர்களைச் சந்தித்து நிமிர்ந்தவர்களே. வலி தாங்கும் கற்களினால் மட்டும் தான் வணங்கத்துக்குரிய சிலைகளாக முடிகின்றது. மாறாக வலியை தாங்க மறுத்த கற்கள் வாசல் படிக்கற்களாக இருந்து மற்றவர் கால்களில் மிதிபடுகின்றது.
அது போன்றே எந்தவொரு வி;டயத்;தையும் தன்னம்பிக்கையோடு பொறுப்பேற்று நடாத்தும் தற்துணிவும் ஒரு மனிதனுக்கு அவசியமானது. அந்தத் தற்துணிவுடன் இணைந்ததாக தலைமைத்துவ முகாமைத்துவ ஆளுமைத்திறன்கள் இருப்பதுடன் பொறுப்பேற்றலின் விளைவாக விழையும் சவால்களுக்கு முகம் கொடுத்தல் இடரினைத் தாங்குதல் என்பனவற்றுடன் நோக்கினை இலகுவாகச் சென்றடைய தந்திரோபாய திட்டமிடல் திறனையும் ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இதனை எமது மாணவர்களும் பெற்றோர்களும்; புரிந்து கொள்வது எதிர்காலத்தை எழில் மிக்கதாக மாற்றும்.
முரண்பாட்டு முகாமைத்துவத் திறன்
இன்று எங்கும் மலிந்து கிடக்கும் விடயமாக முரண்பாடுகளே உள்ளன. வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடுää பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் முரண்பாடுää பாடசாலையில் ஆசிரியருக்கும் அதிபருக்கும் முரண்பாடு ஆசிரியர்களிடையே முரண்பாடு மேலதிகாரிக்கும் அவருக்கு கீழே வேலை செய்பவர்களுக்கும் முரண்பாடு என எங்கும் முரண்பாடு மலிந்து கிடக்கின்றது. இவ் முரண்பாடுகள் சரியான முறையில் முகாமை செய்யப்படாவிடில் அவற்றின் விளைவுகள் ஒரு நிறுவனத்தின் அது (குடும்பமாகவோ பாடசாலையாகவோ அலுவலகமாகவோ இருக்கலாம்) செயற்பாட்டுத்திறனையும் அமைதியையும் சீர்குலைத்து விடுகின்றன.
முரண்பாடுகளை முகாமை செய்வது என்பது தனித்துவமான திறன்;. முரண்பாடுகளை ஆரோக்கியமான விதத்தில் மாற்றிக்கொள்ளலும் தீமை பயக்கத்தக்க முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரலும் அவசியமானது. அதற்கான திறன்களை மாணவர்கள் தங்கள் பாடசாலை வாழ்க்கையிலிருந்தே அனுபவங்கள் வாயிலாக பெற்று வளர்தலே எதிர்காலத்தில் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். முரண்பாடுகளை முகாமை செய்து கொள்வதற்கும் நாம் வாழும் பணிபுரியும் சூழலை மகிழ்ச்சிகரமாக்கிக் கொள்ளவும் நகைச்சுவைத்திறன் அவசியமானது. ஆனால் எமது நகைச்சுவைத்திறன் மற்றவர்களின் மனங்களை புண்படுத்தி விடாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் குறிப்பாக தலமைத்துவப் பொறுப்புக்களில் இருக்கின்றவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான திறன் செவிமடுக்கும் திறன். நம்மில் பலர் மற்றவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுக்க தயாராக இல்லை. மற்றவர்களின் கருத்துக்களும் பெறுமதியானது என உணர்கின்ற ஒரு மனிதனால் தான் தனது கருத்துக்களை தெளிவாக முன்வைக்க முடியும். தலைமைத்துவத்தில் இருக்கின்றவர்களுக்கு பெரிய காதுகளும் சிறிய வாயும் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இது செவிமடுக்கும் திறனின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. செவிமடுக்கும் திறன் என்பதிலிருந்து கிரகித்தல் திறன் என்பது வேறானது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
திறன்களில் அதி முக்கியமானது அமுலாக்கும் திறன். இந்த திறன் இலகுவில் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பலர் நல்ல சிந்தனைக் காவிகளாக இருக்கின்றார்கள். பலரை இருத்தி வைத்து கேட்டால் இந்த உலகத்தை மாற்ற வல்ல பல கருத்துக்கள் குறித்து மணிக்கணக்கில் பேசவல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களது சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆற்றல் அவர்களிடம் வறுமையாகவே உள்ளது. செயல்வடிவம் பெறாத எந்த நல்ல சிந்தனையும் சிறுதுளியும் பயனற்றது. எனவே எமது சிந்தனைகளை அமுலாக்கும் திறன்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு விடயத்தை அமுலாக்க விளையும் போது நாம் சவால்களை சந்திக்கவும் தீர்மானங்களை எடுக்கவும் மற்றவர்களை வழிநடத்தவும் முரண்பாடுகளை முகாமை செய்யவும் வல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமானது.
திறன்களை வளர்த்துக் கொள்வது எவ்வாறு?
திறன்கள் என்பன ஒரு மனிதனிடத்தில் இயல்பாகவே ஏற்படுகின்ற விடயங்கள் எனினும் நாம் எமது முயற்சியினால் அவற்றினை வளர்த்துக் கொள்ள முடியம். தனியே புத்தகப் படிப்பும் பரீட்சைப் பெறுபேறுகளின் வி;ளைவுகளுமே எமது வாழ்வைத் தீர்மானிக்கும் என்ற மனப்பக்குவம் முதலிலே மாற வேண்டும். இதனை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே எமது முன்னோர்கள் ஏட்டுச் சுரக்காய் கறிக்;குதவாது என இயம்பியிருந்தார்கள்.
எனவே நாம் பாடத்திட்டங்களை பாடமாக்;கிக் கொள்வதாலோ அதனை நன்றாக விளங்கி பரீட்சைகளிலே நல்ல மதிப்பெண்களை பெறுவது மட்டுமே எமது வெற்றியை தீர்மானித்து விடப் போவதில்லை. நாம் கற்றல் செயற்பாடுகளுடன் சமாந்தரமாக கல்விசாரா இணைப்பாட விதானச் செயற்பாடுகளையும் முன்னிறுத்திச் செல்லும் போதே திறன்களையும் பொருத்தமான அறிவினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு வகுப்பறை கற்றுக் கொடுக்க முடியாத விடயங்களை விளையாட்டு மைதானங்களும் திறந்த வெளிகளும் நண்பர்கள் வட்டமும் சிறந்த சமூகத்தொடர்பும் எமக்கு கற்றுக் கொடுக்கின்றன.
நாம் வகுப்பறைகளை விட்டு வெளியே வரும் போது வானம் எமக்காக திறந்திருக்கும். இந்த இ;டத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியே வருதல் என்பதை சிலர் வகுப்பறைகளை புறக்கணித்தல் அல்லது கைவிடல் என தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாது.
வகுப்பறைகளை தாண்டி வெளியே உங்களுக்காக காத்திருக்கும் விளையாட்டு வாய்ப்புக்கள் கழகங்கள் சங்கங்களின் செயற்பாடுகளில் பங்கேற்று தலைமை தாங்க கிடைக்;கும் சந்தர்ப்பங்கள் நாடகம் இசை கவிதை பேச்சு கட்டுரை சிறுகதை பொதுஅறிவுப் போட்டி எனப் பங்கேற்கக் கிடைக்கும் வாய்ப்புக்கள் என்பனவற்றை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாது நாம் இன்னொரு மிக முக்கியமான விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் ஒரு சமூக விலங்கு அவன் சமூகத்தோடு இணைந்தே வாழ வேண்டியுள்ளது. சமூகத்;தை சாராது எந்த மனிதனும் வாழுதல் என்பது கடினமானதே. இதனை உணர்ந்து நாம் எமது சமூக மயமாகும் திறனை நிச்சயமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலக மயமாக்கலின் பல விளைவுகள் இன்று பலரது சமூக மயமாகும் திறன்களை மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் அவர்களை தனிமைப்படுத்தி விட்டன. இந்த நெருக்கடியை எமது சமூகம் குறிப்பாக வளரும் மாணவர்கள் எதிர் கொள்ளவே கூடாது. இந்த மிகப் பெரிய சவாலைத் தாண்டி எமது பிள்ளைகள் சமூக மயமாகும் தன்மையை அதிகரித்துக் கொள்ள பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாடசாலை தனியார் கல்வி நிலைய சூழல் என அனைத்துமே வாசல்களை திறந்து வழிகளைக் காட்ட வேண்டும். இன்று பல பெறுமதி மிக்க தனியார் துறை வேலைவாய்ப்புக்களுக்காக (வங்கிகள்) முதலில் திறன்களை மதிப்பிடும் நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டு தெரிவுசெய்யப்படும் சிலருக்கு மட்டுமே அறிவை மதிப்பீடும் பரீட்சைகள் நடாத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களே இவ்வாறு அறிவைத் திறன் மிஞ்சும் சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் நீங்கள் பல தடவைகள் சந்திக்கநேரிடும். அதற்காக இன்றே தயாராகுங்கள்.
முடிவு
ஆழமாக ஆராயப்படவேண்டிய இவ் விடயம் தொடர்பாக சிறியளவில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தத்தக்கவிதத்திலேயே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் திறன்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அறிவோடு சமாந்தரமாக திறன்களையும் வளர்க்க வேண்டும் என்பதே இக் உரையின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் சிந்திப்போம் ஆனால் உள்ளுர் அளவிலே செயலாற்றுவோம் (வுhiமெ புடழடியடடல டிரவ யுஉவ டுழஉயடடல) என அனைவரும் இது விடயம் தொடர்பில் திடசங்கற்பம் ப10ண்டுசவால் மிக்க உலகை வெற்றி கொண்டு சாதனைகளைப் படைக்க எமது மாணவர்களைத் தயார்ப்படுத்துவோம்.
மாணவர்களே பலவகைகளிலும் சவால் மிக்கதாக அமையவுள்ள எமது இனத்தின் எதிர்கால வாழ்வு மாணவர்களாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. வெறுமனே புத்தகப்படிப்பை மட்டும் மையப்படுத்தி வளராது ஆற்றலும் திறனும் உள்ளவர்களாக நீங்கள் நிமிரும் போது உலகம் உங்கள் காலடிகளில் பணிந்து நிற்கும். நீங்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வெற்றிகளும் எங்கள் எல்லோரினதும் பலமான நலமான எதிர்காலத்துக்கு உறுதுணையாக அமையும் என்பதை மறந்து விடாதீர்கள்.
கிடைத்த குறுகிய கால இடைவெளிக்குள் மாணவர்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இவ் உரை குறித்த தங்கள் கனதியான ஆக்கப10ர்வமான பிரதிபலிப்புக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். ஆர்வத்துடன் எனது உரையை செவிமடுத்த அனைவருக்கும் எனது மதிப்பார்ந்த நன்றிகள்.